பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பரிதாப பலி

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது பாக்ரா என்ற பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 24 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply