பேராயர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பிரதமர்

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக, சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் பேராயரின் கோரிக்கையுடன் தான் உடன்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக் குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் அறிக்கைககள் விரைவில் வெளியிடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply