இலங்கை வாழ் ஏழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கோத்தாபயவின் அறிவிப்பு

இலக்கையில் வாழும் ஏழை மக்களுக்காக எதிர்காலத்தில் தான் செயற்படுத்தப்போகும் திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்றை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வாழ்க்கை செலவு சுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்காக எதிர்காலத்தில் நிவாரணப் பொதி ஒன்றை வழங்க உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டிநுவரயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.,

தங்களது கொள்கைப் பிரகடனத்தில் நாட்டின் இறைமையை உறுதிப்படுத்தும் முறையும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முறைமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், வறுமையில் வாழும் மக்களை வாழ்விப்பதற்காக நிவாரணப் பொதியை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த நிவாரணப் பொதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முன்வைக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை இலங்கை வாழ் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply