சஜித் மற்றும் கோட்டாபய தங்களது வாக்குகளை அளித்தனர்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தத்தமது வாக்குகளை அளித்துள்ளனர். அதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நுகேகொடை ஸ்ரீ விவேக்காராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.
அவர் இன்று காலை 8.00 மணி அளவில் தனது வாக்கை அளித்துள்ளார்.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திஸ்ஸமகாராம வீரவில சுரனிமல ஆரம்ப பாடசாலையில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடையும் மாலை 5 மணி வரை பிரதான வேட்பாளர்கள் வாக்களித்த காணொளி மற்றும் புகைப்படங்களை பதிவேற்ற முடியாது என்பது குறிப்பிடதக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply