சிரியாவில் கார்குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டு எல்லையோரத்தில் உள்ள சிரியா நாட்டின் வடக்கு பகுதியான அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அல்-பாப் நகரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கார் இன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply