இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் முதலிடத்தில் கோத்தபாய!

இதுவரை வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 48.20 வீதம் மொத்த வாக்குகளைப் பெற்று முதலாம் இடத்தில் உள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 45.32 வீத வாக்குகளைப் இரண்டாம் நிலையிலும் காணப்படுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி3.27 வீத வாக்குகளுடன் மூன்றாம் நிலையில் காணப்படுகின்றது.

இந்த வகையில், வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 1,516,260 வாக்குகளை பெற்றுள்ளார். வேட்பாளர் சஜித் பிரேமதாச 1,425,563 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 102,911 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply