பாதுகாப்பு செயலாளருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய பதவி

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, பதவியேற்றுள்ளார். சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் புதிய பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்துகிறார் என்று ஐ.தே.க மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply