வாழ்நாள் ஜனாதிபதியாக புட்டினுக்கு ஆசை: அரசியலமைப்பை மாற்ற முஸ்தீபு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (வயது 67), அந்நாட்டின் ஜனாதிபதியாக 4 ஆவது முறையாகவும் பதவி வகித்து வருகிறார். இவரது இந்த பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையிலேயே அவர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ரஷ்ய பாராளுமன்றக் கூட்டு கூட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த உரையில் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார்.
இந்த அரசியல் யாப்பு மாற்றம் அவரை அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த வாக்கெடுப்பில் புட்டினின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், சீன ஜனாதிபதி ஜின்பிங்கைப் போன்று, விளாடிமிர் புட்டினும் வாழ்நாளெல்லாம் பதவியில் நீடிக்க வழி பிறக்கும் எனவும் சர்வதேச தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply