ஏமனில் ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது.

இதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply