துருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள் : 18 பேர் பலி

துருக்கியின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்னளர்.
எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் நிலநடுக்க பாதிப்பினால், 18 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் சிலர் இன்னும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply