இலங்கையிலும் கொரோனா வைரஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் இலங்கையில் அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோய். 41 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவிய முதல் நகரமான வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து வுஹானுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது இலங்கை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply