பிரான்சில் விமானம் தரையில் மோதி தீப்பிடித்து விபத்து : 4 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அங்கோலீம் நகரில் இருந்து கிரீசெல்ஸ் நகருக்கு சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி ஒருவரும், 3 பயணிகளும் இருந்தனர்.

கிரீசெல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சில மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் தடுமாறியது. இதையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அப்போது விமானம் தரையில் மோதி தீப்பிடித்தது. சற்று நேரத்தில் விமானம் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply