குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை  உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு

Sunday, August 10th, 2025 at 11:23 (SLT)

சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது : டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில்

Sunday, August 10th, 2025 at 11:16 (SLT)

உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முத்தையன்கட்டு சம்பவம் அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? : சாணக்கியன் கேள்வி

Sunday, August 10th, 2025 at 11:10 (SLT)

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது.

மேலும் வாசிக்க >>>

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?சீமான் கேள்வி

Sunday, August 10th, 2025 at 11:06 (SLT)

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

மேலும் வாசிக்க >>>

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் மரணம்

Saturday, August 9th, 2025 at 11:22 (SLT)

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (Jim Lovell) (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான ஸ்மிலின் ஜிம் லவெல் , அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் காலமானார்.

மேலும் வாசிக்க >>>

வேன் மீது ரயில் மோதி விபத்து பெண் சாரதி காயம்

Saturday, August 9th, 2025 at 11:17 (SLT)

அளுத்கம பகுதியில் உள்ள சீலானந்த வீதியில் அமைந்த ரயில் கடவையில் இன்று காலை சிறிய ரக வேன் மற்றும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நல்லூர் செல்வோருக்கு பொலிசார் விடுத்த விசேட அறிவிப்பு

Saturday, August 9th, 2025 at 11:14 (SLT)

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

Saturday, August 9th, 2025 at 11:09 (SLT)

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலின் தீர்மானம் குறித்து கவலை வௌியிட்டுள்ள இலங்கை

Saturday, August 9th, 2025 at 11:07 (SLT)

காசா பகுதியின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு

Saturday, August 9th, 2025 at 11:04 (SLT)

ஓபநாயக்கவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.நேற்று (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சிறையில் இருந்து பிள்ளையானால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை

Saturday, August 9th, 2025 at 10:56 (SLT)

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

“இந்த நிலம் விற்பனைக்கு இல்லை”: மன்னாரில் இளைஞர்கள் 2 நாள் போராட்டம்

Saturday, August 9th, 2025 at 10:53 (SLT)

மன்னாரில் சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான தொன் கனிய மண்ணை அகழும் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இளைஞர்கள் குழு இரண்டு நாள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தை சந்தித்தார் சஜித்

Saturday, August 9th, 2025 at 10:47 (SLT)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் (Samantha Joy Mostyn) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு மனித புதைகுழியை அகழ்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

Saturday, August 9th, 2025 at 8:08 (SLT)

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில், இராணுவ மேற்பார்வையின் கீழ் அகழ்வாய்வை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை

Saturday, August 9th, 2025 at 6:27 (SLT)

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>