காற்றாலைத் திட்டத்தை உடன் நிறுத்துக : துரைராசா ரவிகரன்

Friday, August 8th, 2025 at 12:02 (SLT)

காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மன்னார் தீவினுள் மேற்கொள்வதற்கு இடமளித்தால் மன்னார் தீவின் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் ஏற்றுக்கொள்ளாத இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் பெண்

Friday, August 8th, 2025 at 11:59 (SLT)

இரத்தினபுரியில் தேயிலை வெட்டும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை கணவன் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் முறையற்ற உறவின் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Friday, August 8th, 2025 at 7:55 (SLT)

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கென்யாவில் விமான விபத்து : 6 பேர் பலி

Friday, August 8th, 2025 at 7:53 (SLT)

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

மேலும் வாசிக்க >>>

500 போதை மாத்திரைகள் பறிமுதல் : இளைஞன் கைது

Friday, August 8th, 2025 at 7:50 (SLT)

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு (8) பொலிஸார் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியதுடன், 25 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது : எஸ்.எம். மரிக்கார் 

Thursday, August 7th, 2025 at 10:17 (SLT)

பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் சிரேஷ்ட DIG பிரியந்த ஜயகொடிக்கு பிணை

Thursday, August 7th, 2025 at 10:14 (SLT)

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Thursday, August 7th, 2025 at 10:11 (SLT)

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3,060 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

Thursday, August 7th, 2025 at 10:07 (SLT)

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமா? : நாமல் ராஜபக்ஷ

Thursday, August 7th, 2025 at 5:17 (SLT)

இலங்கை மின்சார (திருத்தச்) சட்டமூலத்தில் சுயாதீன இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிதியமைச்சின் ஆலோசனையை கோர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழு, பிறிதொரு அமைச்சின் ஆலோசனை கோரும் போது அங்கு சுயாதீனத்தன்மை எவ்வாறு பேணப்படும் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிதான் நிதியமைச்சின் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார். இவர் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுவார். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்க முடியுமா என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி அகழ்வுக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பு : இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

Thursday, August 7th, 2025 at 5:13 (SLT)

செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்க ளென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கானாவில் ஹெலிகாப்டர் விபத்து : 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி

Thursday, August 7th, 2025 at 5:08 (SLT)

ஆப்பிரிக்க நாடான கானாவில் 6ஆம் திகதி புதன்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இன்று வருகை

Wednesday, August 6th, 2025 at 7:53 (SLT)

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாமல் ராஜபக்க்ஷ எம்.பியின் கூற்றால் சபையில் சர்ச்சை

Wednesday, August 6th, 2025 at 7:50 (SLT)

நிலையியற் கட்டளை 98 Fன் கீழ் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என, தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விவாதம் தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ எம்.பி முன்வைத்த கூற்றால் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே, நாமல் ராஜபக்க்ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை

Wednesday, August 6th, 2025 at 7:46 (SLT)

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து நேற்று புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று 31 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 141 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>