பொதுவெளியில் சந்தித்து கொண்ட சஜித் : மகிந்த

Friday, August 1st, 2025 at 19:42 (SLT)

முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரே இடத்தில் சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த பி. தயாரத்னவின் அஞ்சலி நிகழ்விலேயே இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 அதிகாரிகள்

Friday, August 1st, 2025 at 19:38 (SLT)

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற அங்காடிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வாக விலங்குகளுக்கு உணவு உற்பத்தி செய்வது அவசியம் : கே.டி.லால் காந்த

Friday, August 1st, 2025 at 11:51 (SLT)

யானை-மனித மோதலுக்கு நிரந்தர தீர்வாக விலங்குகளுக்கு உணவு உற்பத்தி செய்வது அவசியம் என்று விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த சுட்டிக்காட்டுகிறார். மனிதகுலத்திற்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், வனவிலங்குகளுக்கான உணவு ஆதாரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆறு மாதங்களில் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

Friday, August 1st, 2025 at 11:48 (SLT)

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை

Friday, August 1st, 2025 at 11:44 (SLT)

யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவர் உயிரிழந்தவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

Friday, August 1st, 2025 at 11:42 (SLT)

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். நேற்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுத்த விசாரணையின் போது, சந்தேக நபரின் வீட்டில் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத பல கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு கிடைத்த வெற்றி வரியை 20 வீதமாக குறைத்த டிரம்ப்

Friday, August 1st, 2025 at 11:39 (SLT)

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி, இலங்கை உட்பட பல நாடுகளில் தீர்வை வரி வீதம் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் கலந்துரையாடல்

Friday, August 1st, 2025 at 8:22 (SLT)

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய செயற் குழு மற்றும் அது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

மிலிந்த மொரகொடவுடன் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நோமன் சந்திப்பு

Friday, August 1st, 2025 at 8:19 (SLT)

பாத் பைன்டர் பவுண்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நோமனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இந்திய பசுபிக், இந்து சமுத்திர பிராந்திய பாதுகாப்பு மற்றும் வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் : போக்குவரத்து அமைச்சகம்

Friday, August 1st, 2025 at 6:04 (SLT)

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

Thursday, July 31st, 2025 at 8:17 (SLT)

அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன.ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர்.

மேலும் வாசிக்க >>>

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

Thursday, July 31st, 2025 at 8:08 (SLT)

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Thursday, July 31st, 2025 at 8:05 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையமா?

Thursday, July 31st, 2025 at 5:31 (SLT)

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு : உமா குமரன் வரவேற்பு

Thursday, July 31st, 2025 at 5:27 (SLT)

செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>