காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி பலி

Tuesday, June 17th, 2025 at 9:36 (SLT)

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவில் உள்ள வலஸ்கல காட்டுப் பகுதியில் இந்த காட்டு யானைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Tuesday, June 17th, 2025 at 9:33 (SLT)

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக எமக்குத் தான் வெற்றி : ரிஸா சரூக்

Tuesday, June 17th, 2025 at 9:26 (SLT)

மாகாண ஆணையாளர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு, ரகசிய வாக்கெடுப்புக்கு சென்றதாலே எமக்கு பின்னடைவு ஏற்பட்டது. பகிரங்க வாக்கெடுப்புக்கு சென்றிருந்தால் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரிஸா சரூக் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

Tuesday, June 17th, 2025 at 9:23 (SLT)

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக யாழ் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் : தேசியமக்கள் சக்தி

Monday, June 16th, 2025 at 9:03 (SLT)

வவுனியா மாநகரசபையின் ஆட்சியை தாங்களே கைப்பற்றுவோம் என தேசியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பிரதி முதல்வர் தெரிவுகள் இடம்பெறவுள்ளநிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வன்னிபிளாசா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

Monday, June 16th, 2025 at 8:58 (SLT)

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பதில் முதல்வர் தெரிவுகள் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டம் தடுத்தார் டிரம்ப் : சிபிஎஸ் நியுஸ்

Monday, June 16th, 2025 at 8:55 (SLT)

ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்த்தார் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : பலர் காயமடைந்துள்ளனர்

Monday, June 16th, 2025 at 8:49 (SLT)

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.அந்த பகுதி தீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரச ஊடகமான ஹான் தாக்கப்பட்ட பல பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கம்பளையில் மோட்டார் சைக்கிள் விபத்து

Monday, June 16th, 2025 at 8:45 (SLT)

கம்பளை, நிதாஸ் மாவத்தை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது.குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயம் அடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

அரசு திட்டமிடுவதைப்போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது : உதய கம்மன்பில

Sunday, June 15th, 2025 at 9:09 (SLT)

நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

Sunday, June 15th, 2025 at 9:06 (SLT)

குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பலகஸ்சார வீதிக்கு அருகில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

மேலும் வாசிக்க >>>

வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது

Sunday, June 15th, 2025 at 9:03 (SLT)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் இலங்கை பெண்ணொருவர் காயம்

Sunday, June 15th, 2025 at 9:01 (SLT)

இஸ்ரேலின் டெல் அவிவ், ஐஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு

Sunday, June 15th, 2025 at 8:58 (SLT)

இலங்கையில் தற்போது உள்ள இஸ்ரேலிய சேவையாளர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதால், திட்டமிடப்பட்ட திகதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

Sunday, June 15th, 2025 at 7:08 (SLT)

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.