வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் : தேசியமக்கள் சக்தி

வவுனியா மாநகரசபையின் ஆட்சியை தாங்களே கைப்பற்றுவோம் என தேசியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (16) வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பிரதி முதல்வர் தெரிவுகள் இடம்பெறவுள்ளநிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வன்னிபிளாசா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றது.

தேசியமக்கள்சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சைகுழுவின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்பின்னர் கருத்து தெரிவித்த தேசியமக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் சிவசங்கர் இவ்வாறு தெரிவித்தார். நாம் சிலதரப்புக்களுடன் பேசியிருக்கின்றோம். இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியால் சிறந்த ஒரு அதிகாரத்தை வழங்க முடியும் என்று நினைக்கும் கட்சிகள் எமக்கு ஆதரவினை வழங்கும். எனவே மாநகரசபையின் ஆட்சியினை நாம் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply