செவ்வந்தி பதுங்கியிருப்பதாக ஹோட்டல் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்

Wednesday, April 2nd, 2025 at 10:17 (SLT)

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி : அரசாங்கத்தின் புதிய திட்டம் அறிவிப்பு

Wednesday, April 2nd, 2025 at 10:13 (SLT)

இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

Wednesday, April 2nd, 2025 at 10:10 (SLT)

அம்பாறை – இறக்காமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, சாவாறு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி மாலை குறித்த மீனவர், நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் வெற்றிக்காக போலியான வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது : நாமல் ராஜபக்ஷ

Wednesday, April 2nd, 2025 at 10:08 (SLT)

தேர்தல் வெற்றிக்காக வடக்குக்கு ஒன்றும் தெற்குக்கு பிறிதொன்றும் குறிப்பிடவில்லை. தேசிய மக்கள் சக்தி தேர்தல் வெற்றிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கியது. முரண்பாடற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இவ்வருடம் மாகாணசபை தேர்தல் இடம்பெறாது : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Wednesday, April 2nd, 2025 at 10:00 (SLT)

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இவ்வருடம் வேறு எந்த தேர்தலும் இடம்பெறாது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல் இடம்பெறும். எனினும் இவ்வருடம் தேர்தல் இடம்பெறாது. தேர்தலை நடத்த தேர்தல் சட்ட விதிமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Wednesday, April 2nd, 2025 at 9:56 (SLT)

யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மேலும் வாசிக்க >>>

இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை : ஜயந்த சமரவீர

Tuesday, April 1st, 2025 at 10:19 (SLT)

இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ராகமவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Tuesday, April 1st, 2025 at 10:15 (SLT)

ராகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று திங்கட்கிழமை (31) சோதனை மேற்கொண்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நால்வர் காயம்

Tuesday, April 1st, 2025 at 10:12 (SLT)

தெற்கு அதிவேக வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் : உதய கம்மன்பில

Tuesday, April 1st, 2025 at 9:22 (SLT)

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து குதித்தவர் கைது

Tuesday, April 1st, 2025 at 9:14 (SLT)

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Tuesday, April 1st, 2025 at 9:11 (SLT)

அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்:எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Tuesday, April 1st, 2025 at 9:07 (SLT)

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கி- ரவைகளுடன் முன்னாள் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் கைது

Tuesday, April 1st, 2025 at 9:03 (SLT)

அனுமதிப்பத்திரம் இல்லாத “பொரதொளகாய் சொட் கண்” வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், ரி-56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (31) நண்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Tuesday, April 1st, 2025 at 8:55 (SLT)

நாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>