உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் சர்ச்சை: முக்கிய கலந்துரையாடலின் பின்னர் நிசாம் காரியப்பர் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்தவை

Monday, March 31st, 2025 at 6:58 (SLT)

கடந்த 28ஆம் திகதி,வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), , நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றபோது, ஜனநாயக தேசிய கூட்டணியால் தாக்கல் செய்யப்பட்ட S.C. Writ No. 06/25 உட்பட, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டு வருகிறது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Monday, March 31st, 2025 at 6:25 (SLT)

நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம் ஜனநாயகமும் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கடந்த வருடம் மாத்திரம் 9200 காசநோயாளர்கள் சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி

Monday, March 31st, 2025 at 6:16 (SLT)

நாட்டில் கடந்த வருடம் மாத்திரம் சுமார் 9200 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 250 பேர் சிறுவர் காசநோயாளர்கள் என சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வைத்தியரை தாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Monday, March 31st, 2025 at 6:10 (SLT)

கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணரை தாக்கிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேஷபந்து தென்னகோனை பாெலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரேரணையை விமர்சித்த விஜயதாச ராஜபகஷ்

Monday, March 31st, 2025 at 6:07 (SLT)

தேஷபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பதவி அனுமதிக்கப்பட்டதல்ல என உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவொன்றை வழங்கியுள்ள நிலையில் தேஷபந்து தென்னகோனை பாெலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டமை பாராளுமன்ற அதிகாரத்தை மலினப்படுத்துவதாகும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபகஷ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Sunday, March 30th, 2025 at 8:12 (SLT)

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

Sunday, March 30th, 2025 at 8:08 (SLT)

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய காலநிலை

Sunday, March 30th, 2025 at 6:18 (SLT)

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

தேசப்பந்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு சிஜடி அழைப்பு

Sunday, March 30th, 2025 at 6:14 (SLT)

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை முன்னெடுப்பதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் : ஜனாதிபதி

Sunday, March 30th, 2025 at 6:02 (SLT)

அரசாங்கத்திற்கு எதிராக இப்போது அதிகம் கூச்சலிடுபவர்கள்தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார். இதேவேளை, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும் வாசிக்க >>>

தேசபந்துவுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது

Saturday, March 29th, 2025 at 13:55 (SLT)

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

மேலும் வாசிக்க >>>

போதைப்பொருளுடன் கிராம சேவையாளர் கைது

Saturday, March 29th, 2025 at 13:52 (SLT)

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தலைமன்னாரில் 124 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Saturday, March 29th, 2025 at 13:50 (SLT)

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாங்கொக்கில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

Saturday, March 29th, 2025 at 8:27 (SLT)

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் பாதகமான சம்பவங்கள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மோடியின் விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் விசேட அறிவிப்பு

Saturday, March 29th, 2025 at 8:04 (SLT)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இதன்போது எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மானிய உதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>