10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

Wednesday, March 26th, 2025 at 9:09 (SLT)

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா். ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள விசேட தீர்மானம்

Wednesday, March 26th, 2025 at 9:06 (SLT)

தேர்தலின் போது எடுக்கும் முடிவுகளை அறிவிக்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் சில அமைச்சுகள் சில முடிவுகளை எடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் பின்னர் அது குறித்து ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு தவறுகளை திருத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கி ரவைகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கைதான இராணுவ சிப்பாய்

Wednesday, March 26th, 2025 at 9:03 (SLT)

துப்பாக்கி ரவைகளை தனது பையில் மறைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

Tuesday, March 25th, 2025 at 18:11 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி உயிரிழப்பு

Tuesday, March 25th, 2025 at 9:42 (SLT)

சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) ஹான் ஜோங்-ஹீ (Han Jong-Hee) இன்று (25) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

Tuesday, March 25th, 2025 at 9:38 (SLT)

இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவு மற்றும் தகவல் தொடர்பு தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய கால நிலை பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை

Tuesday, March 25th, 2025 at 9:32 (SLT)

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

Tuesday, March 25th, 2025 at 9:27 (SLT)

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு

Tuesday, March 25th, 2025 at 9:24 (SLT)

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை : பிரிட்டனின் தடைகள் குறித்து கனடாவின் நீதியமைச்சர்

Tuesday, March 25th, 2025 at 9:20 (SLT)

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம் : முஜிபுர் ரஹ்மான்

Monday, March 24th, 2025 at 7:15 (SLT)

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பட்டியல் எமக்கு எந்த வகையில் சவாலானதல்ல. காரணம் வெற்றி பெறும் ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து நாம் சபைகளை நிறுவுவோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவாலானதாக அமைந்தாலும் அந்த சவாலை நிச்சயம் வெற்றி கொள்வோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

Monday, March 24th, 2025 at 7:10 (SLT)

கடந்த 21ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது இலங்கை

Monday, March 24th, 2025 at 7:06 (SLT)

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவிக்கையில்

மேலும் வாசிக்க >>>

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக் கொடுக்க அரசாங்கம் முயற்சி : அஜித் பி பெரேரா

Monday, March 24th, 2025 at 7:02 (SLT)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான அல்ஜசீராவின் நிகழ்ச்சி நிரலுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரை காட்டிக் கொடுக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டினார்.

மேலும் வாசிக்க >>>

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளது:மதுசான் சந்திரஜித்

Monday, March 24th, 2025 at 6:59 (SLT)

தேர்தலுக்கு முன்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்த அரசாங்கம், பொய்யான வாக்குறுதியை வழங்கி தமது வாக்குகளுக்காக மாத்திரம் அவர்களை உபயோகித்துக் கொண்டு தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது என தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்திரஜித் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>