கனடாவில். யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்

Saturday, March 15th, 2025 at 13:21 (SLT)

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கரி ஆனந்தசங்கரி ஆவார்.

மேலும் வாசிக்க >>>

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் : சமந்த வித்யாரத்ன

Saturday, March 15th, 2025 at 7:55 (SLT)

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பில் தோட்ட முதலாளிமார்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம். சில முதலாளிமார் தனிப்பட்ட ரீதியில் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் பொது இணக்கப்பாடொன்றை எடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும் தடைகளை உடைக்கப்படும் : பிரதமர்

Saturday, March 15th, 2025 at 7:48 (SLT)

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து, பொருளாதாரத்தில் பெண்கள் முழுமையாகப் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தும் தடைகளை உடைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் சாதனை

Friday, March 14th, 2025 at 21:37 (SLT)

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் பொலிஸ்மா அதிபரைக் கூட கைது செய்ய முடியவில்லை: சஜித்

Friday, March 14th, 2025 at 21:33 (SLT)

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான பொலிஸ் துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம் பயம் மரியாதை முற்றாக இல்லாது போயுள்ளன. நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது நீதிபதிகளுக்கு ஏற்படும் அதிர்ச்சியை சொல்லி முடிக்க முடியாது. இனியும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

Friday, March 14th, 2025 at 21:31 (SLT)

அம்பலாங்கொடை-இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் மாயம்: கிடைத்துள்ள துயரச் செய்தி

Friday, March 14th, 2025 at 21:30 (SLT)

நெதர்லாந்தில் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமான நிலையில், அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்திய மாணவரான தேவேஷ் (Devesh Bapat, 23), நெதர்லாந்திலுள்ள Eindhoven University of Technology என்னும் கல்வி நிறுவனத்தில் கல்வி பயின்றுவந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Friday, March 14th, 2025 at 8:32 (SLT)

இன்று (14) மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும் வாசிக்க >>>

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

Friday, March 14th, 2025 at 8:22 (SLT)

களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்புக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்று நள்ளிரவு முதல் கிராம உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

Friday, March 14th, 2025 at 8:15 (SLT)

பெண் கிராம உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (14) நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு

Friday, March 14th, 2025 at 8:11 (SLT)

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் போலி இலக்க தகடுகளுடன் பயணிக்கும் 2,267 சொகுசு வாகனங்கள்

Thursday, March 13th, 2025 at 8:49 (SLT)

நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள் மூலம் இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் : மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்

Thursday, March 13th, 2025 at 8:38 (SLT)

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கல்னேவ, நிதிகும்பாயாய வனப்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் : துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது

Thursday, March 13th, 2025 at 8:34 (SLT)

மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்திருந்த போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழப்பு

Thursday, March 13th, 2025 at 7:05 (SLT)

தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இயங்கிவந்த 3 லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இயந்திர செயலிழப்புத் தொடர்பில் புதன்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>