யாழில் பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Saturday, January 11th, 2025 at 10:30 (SLT)

யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் இன்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உதயங்க வீரதுங்கவுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Saturday, January 11th, 2025 at 10:27 (SLT)

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராஜதந்திரியான உதயங்க வீரதுங்க அவரது அயலவர் ஒருவரைத் தாக்கியமைக்காக வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிப்பு பட்டினி நிலை ஆய்வில் தகவல்

Saturday, January 11th, 2025 at 10:22 (SLT)

லங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையும்,ஒரளவு அல்லது மோசமான பட்டினிநிலையில் சிக்குண்டுள்ளமையும் ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது. பியான் FIAN என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வின்போது இது தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொரளையில் 12வது மாடியில் இருந்து விழுந்த 16 வயது சிறுமி உயிரிழப்பு

Saturday, January 11th, 2025 at 10:17 (SLT)

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால்தான் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : வஜிர அபேவர்தன

Friday, January 10th, 2025 at 12:39 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைப்பாடுகளே இதற்கு பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொச்சிக்கடையில்  நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி

Friday, January 10th, 2025 at 12:36 (SLT)

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Friday, January 10th, 2025 at 12:33 (SLT)

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நூறு கைதிகளுடன் சேர்த்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் : ஞானசார தேரர்

Friday, January 10th, 2025 at 12:30 (SLT)

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் வாசிக்க >>>

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

Friday, January 10th, 2025 at 12:27 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்ஜை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

Friday, January 10th, 2025 at 12:25 (SLT)

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மர்மமான முறையில் கொல்லபட்ட பெண் : மயானத்துக்கு அருகில் சடலம் மீட்பு

Friday, January 10th, 2025 at 12:23 (SLT)

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இலங்கையர் மீது குற்றச்சாட்டு

Friday, January 10th, 2025 at 12:19 (SLT)

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தாயார் தலைமுடியை வெட்டியதால் , ஆத்திரமடைந்த மாணவன் உயிர்மாய்ப்பு 

Friday, January 10th, 2025 at 12:16 (SLT)

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையத்திற்குள் சொகுசு பேருந்துகளுக்கு அனுமதி

Friday, January 10th, 2025 at 12:12 (SLT)

187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்குள் பிரவேசிப்பதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

Thursday, January 9th, 2025 at 9:24 (SLT)

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மையில் காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>