அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க தீவிர பேச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது த.வெ.க. இந்த சூழலில், அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க ஆட்சியமைக்க காத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி நேற்று புதன்கிழமை அன்று த.வெ.க கூட்டணியில் இணைந்தது. காங்கிரஸின் 5 பேரை தாண்டி, பெரும்பான்மைக்கு மேலும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், த.வெ.க தரப்பு வி.சி.க, இடதுசாரிகள், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருகிறது.
இந்த சூழலில் ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை வைத்தார். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்காததால், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆட்சியமைப்பதற்காக விஜய்க்கு இப்போது வரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
மேலும், த.வெ.கவுக்கு ஆதரவளிப்பது குறித்து அ.தி.மு.கவில் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ‘எந்த நிலையிலும் த.வெ.கவுக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இந்த சூழலில்தான், அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி தொடர்பான பேச்சு நடந்ததாக தகவல்கள் பரவ ஆரம்பித்தன. அ.தி.மு.க ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும், தி.மு.க வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply