போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: ஈரான் அறிவிப்பு

போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை மீறுவதற்கு முயன்ற ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. எனினும் ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான இரண்டு மாத கால மோதல் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையே சர்வதேச சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் மீண்டும் எண்ணெய் விநியோகம் அனுமதிக்கப்படுமா என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 100டாலர் என்ற அளவில் நிலைபெற்றது.

மோதலால் தடைபட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் ஆனால் விவரிக்கப்படாத ஒரு ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்வதை பொறுத்தே அது அமையும் என்றும் அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் ஒப்புக்கொள்ளாவிட்டால் குண்டுவீச்சு தொடங்கும் என்றும் ஈரானை அவர் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் பயணத்துக்கு முன்னதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி சீனா சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply