நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது

Monday, November 11th, 2024 at 10:32 (SLT)

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை – இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,

மேலும் வாசிக்க >>>

நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்

Monday, November 11th, 2024 at 10:28 (SLT)

பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகள் ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வைத்து கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2580 முறைப்பாடுகள் பதிவு

Monday, November 11th, 2024 at 10:23 (SLT)

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை) 2,580 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் : விஜித ஹேரத்

Monday, November 11th, 2024 at 10:20 (SLT)

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


ரயில் இன்ஜின் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உடல் நசுங்கி பரிதாப மரணம்

Monday, November 11th, 2024 at 10:16 (SLT)

பீகாரில் ரயில் பெட்டியையும், இன்ஜினையும் இணைக்கும் கப்ளிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ரயில்வே ஊழியர், 2 பெட்டிகளின் கப்ளிங்கின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காசாவில் இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதல் பரிதாபமாக உயிரிழந்த 32 பேர்

Monday, November 11th, 2024 at 10:08 (SLT)

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். ஜபாலியா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை குறிவைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுன்னாகம் பொலிஸார் மீது இளம் தாய் குற்றச்சாட்டு

Sunday, November 10th, 2024 at 13:16 (SLT)

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Sunday, November 10th, 2024 at 13:10 (SLT)

அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வயோதிபர்

Sunday, November 10th, 2024 at 13:05 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டு தலைமறைவாகியோர் தொடர்ந்தும் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது : ஜனாதிபதி

Sunday, November 10th, 2024 at 13:01 (SLT)

கடந்த காலங்களில் பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் தினத்தன்று IMF குழு இலங்கைக்கு

Sunday, November 10th, 2024 at 12:55 (SLT)

7ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் அடுத்த கட்ட கடன வசதி குறித்து அரச தரப்பினருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு

Sunday, November 10th, 2024 at 12:53 (SLT)

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து நாட்டுப்படகு மூலம் நெடுந்தீவு வருகை தந்த 9 பேர்

Sunday, November 10th, 2024 at 12:47 (SLT)

இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் ​நேற்று (09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

Sunday, November 10th, 2024 at 12:45 (SLT)

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் மீட்பு

Sunday, November 10th, 2024 at 12:42 (SLT)

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>