நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Monday, January 19th, 2026 at 8:13 (SLT)

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) களனி, கொஹொல்வில பகுதியில் வைத்து இந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Monday, January 19th, 2026 at 8:11 (SLT)

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து : 21 பேர் பலி

Monday, January 19th, 2026 at 8:08 (SLT)

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

Monday, January 19th, 2026 at 8:04 (SLT)

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை

Monday, January 19th, 2026 at 6:22 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் ஆர்ப்பாட்டம் : பலி எண்ணிக்கை 5000 ஆக அதிகரிப்பு

Sunday, January 18th, 2026 at 20:37 (SLT)

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

புறா பிரச்சினையால் ஒருவர் கொலை

Sunday, January 18th, 2026 at 20:34 (SLT)

புறாக்கள் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே இன்று (18) பிற்பகல் பேலியகொட, மீகஹவத்த பகுதியில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நந்தன குணதிலக காலமானார்

Sunday, January 18th, 2026 at 7:49 (SLT)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார்.

மேலும் வாசிக்க >>>

“மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்” : ஜனாதிபதியிடம் கோரிக்கை

Sunday, January 18th, 2026 at 7:46 (SLT)

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது

Sunday, January 18th, 2026 at 7:43 (SLT)

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேரூந்துகள் : பயணிகள் அவதி

Saturday, January 17th, 2026 at 11:47 (SLT)

ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக நேற்றைய தினம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவைகளும் நேற்று காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும் வாசிக்க >>>

தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

Saturday, January 17th, 2026 at 11:40 (SLT)

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள் : உதய கம்மன்பில

Saturday, January 17th, 2026 at 11:37 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள். பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உணவும் உண்ணவில்லை. அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறதென பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உழவு இயந்திர விபத்தில் சாரதி உயிரிழப்பு

Saturday, January 17th, 2026 at 11:34 (SLT)

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியொன்றில் நேற்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இருந்து வந்த நபர் கட்டுநாயக்காவில் கைது

Saturday, January 17th, 2026 at 11:31 (SLT)

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் இன்று (17) அதிகாலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>