மக்களுக்கு நன்மை பயக்காத கூட்டமைப்பு

November 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் பேசும் கட்சிகள் கூட்டமைப்பாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்து மீண்டும் முன்வைக்கப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன் இது தொடர்பான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதன் பின் அது பற்றிய பேச்சு எழவில்லை.

இச் சந்திப்பில் பங்கு பற்றிய இரண்டு கட்சிகள் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கூட்டணியில் பங்காளிகளாகின. இவ்விரு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால சகபாடிகள் என்பதால் இவை ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிகள் ஆகியதொன்றும் புதுமையானதல்ல. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது: பாதுகாப்பு செயலர் கோத்தாபய

August 29th, 2009 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தாய்நாட்டை பயங்கர வாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இல ங்கையின் கடற்பரப்பை பாது காக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த வர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ் வவுனியா தேர்தல்கள்

August 3rd, 2009 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு  மீண்டும் ஒரு தேர்தல். மிகச் சிறிய தேர்தலாக இருந்த போதும் உலக சரித்திரத்தில் கண்டு கேட்டிராத ஆரவாரம். அதற்குக் காரணமும் இருக்கென்றே சொல்லலாம். பழைய காலங்கடந்த இனக்குரோத அரசியலைத் தமிழ்மக்கள்  துறக்கிறோம் என்றதைச் சத்தியப் பிரமாணம் செய்து சிங்களமக்களோடு  ஐக்கியப் படத் தயார் என்பதைச் சமிக்ஞை செய்யக் கிடைத்த முதலும் கடைசியுமான அரிய சந்தர்ப்பம். மனிதர்கள் தமது பிழைகளைச் சரி செய்யவேண்டும் என்னும் எண்ணமிருந்தால் எந்த நிலையிலும் சரி செய்து கொள்ள முடியும். மனிதர்கள் தம்மை எதற்குத் தகுதியுடையவர்களாக்க வேண்டுமென்று யோசிக்கிறார்களோ அதை அவர்கள் அடைவார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கரொலைன் அந்தோனிப் பிள்ளை

July 9th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் மூத்த பரம்பரையினரில் இறுதியாக உயிரோடு இருந்தவரான கரொலைன் அந்தோனிப்பிள்ளை கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு 101வது. சென்றவருடம் ஒக்ரோபர் 8ந் திகதி நூறு வயதுப் பூர்த்தியை அவர் கொண்டாடினார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமக்கென அழியாத இடம் பதித்த பொரளுகொட வளவு வாரிசுகளுள் ஒருவரே கரோலைன். பிலிப் குணவர்தன, றொபேட் குணவர்தன ஆகியோரின் இளைய சகோதரியான கரோலைன் இளம் வயதிலேயே தீவிரமான அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வட்டுக்கோட்டை தவறான தீர்மானம் காரணமாகவே இத்தனை பேரழிவுகள்

July 8th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மையில் (21.06.2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு, வடக்கு கிழக்கில் நிலவும் நிலைமைகள் குறித்து மிக அருமையான கடிதம் ஒன்றை எழுதியிருந்ததை, ‘தேனீ’ இணையத்தளம் மூலமாக வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். புலிகளின் எதேச்சாதிகாரப் பிடியில் இருந்து தமிழ்மக்கள் அரசாங்கத்தால் மீட்கப்பட்ட நிலையில், சில ‘குட்டிப் புலிகளின்’ பிடியில், மீண்டும் தமிழ் மக்கள் சிக்குவதை எந்தக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்கக் கூடாது. அந்த விடயத்தில் ஆனந்தசங்கரி அவர்களின் கருத்துடன, உண்மையான ஜனநாயகவாதிகள் ஒத்துப்போவார்கள் என்பதில் ஐயமில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஈழத் தமிழ் அரங்கில் மகத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை

July 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கலாநிதி இ. முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர் நாடக எழுத்துருப்படைப்பாளி யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாலசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார். இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப் படிப்புபையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக கல்வித் திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராக கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் இவர். 1965 ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பிள்ளைகள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெறும் கூட்டு பலன் தராது

July 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுடன் கூட்டுச் சேர வேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதனுக்கான அனுதாபப் பிரேரணை மீது பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இந்த அழைப்பை அவர் விடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இவ்வாறான கருத்துகளை அண்மைக் காலத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாராளுமன்றுக்கிருந்த அதிகாரங்களை இல்லாமல் செய்தது சந்திரிகா அரசு

June 26th, 2009 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தவறிழைக்கும் ஊடகங்கள் தொடர்பில் ஒரு நீதிமன்றத்தைப் போன்று செயற்படுவதற்குப் பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களை இல்லாமற் செய்தமை, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகுமென்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தெரிவித்தார். பத்திரிகையொன்றில் வெளியான கவனக்குறைவான அறிக்கையிடுதல் தொடர்பாக தகவல் ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சபையில் திருத்தத்தைத் தெரிவித்தபோதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்

June 20th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.

மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மேமாத நடுப்பகுதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. கடந்த முப்பது வருட காலத்தில் அவ்வப்போதிருந்த அரசபடைகளால் யுத்தம் நடைபெற்றபோதும் விடுதலைப்புலிகளுடன் பெருஞ்சமர் புரிந்த போதும் பலத்த இழப்புக்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறிமாறி இருசாராரும் பெற்றுக்கொண்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வேட்டை முடிந்து விளையாட்டு…

June 15th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது

June 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடாரம் போடுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடக்கவுள்ள தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்பதற்கு ஆட்களைத் தேடுகின்றார்கள். ஒருகாலத்தில் வேட்பாளர் ‘ரிக்கற்று’க்காக ஆட்கள் இவர்களைத் தேடி வந்தார்கள். இப்போது இவர்கள் வேட்பாளர்களைத் தேடி அலைகின்றார்கள். தமிழ் அரசியல் அரங்கில் ஒரு மாற்றத்தை இது கோடி காட்டுகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியம்

June 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

June 10th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்வாணியும் தகவல்களும்

June 10th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

“ புலிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதனை சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு புலிகள் இயக்கம் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. எமது சிரேஷ்டத் தலைவர் சிங்கள இனத்திற்கு அதன் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார் ” – வி.பாலகுமாரன். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ எதையுமே தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்யுமென்று இனிமேலும் வீணாக நம்பாதிருப்போமாக!

June 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button