ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் :வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

December 4th, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

carஇரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்க போர் விமானம் ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கியது

September 22nd, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

jetஅமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏவி8பி ஹாரியர் 2 ஜெட் ரகத்தைச் சேர்ந்த போர் விமானமொன்று ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது.ஒகானாவா தீவில் இருந்து புறப்பட்ட இந்த போர் விமானம் சிறிது நேரத்திலேயே கடலின் கிழக்குப் பகுதியில் விழுந்து விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஜப்பான் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை பத்திரமாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவிடம் இருந்து 100 போயிங் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம்

June 19th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

boeingசர்வதேச பொருளாதாரத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.தற்போது ஈரானில் உள்ள 250 பயணிகள் விமானத்தில் 230 விமானங்களை மாற்ற வேண்டியுள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சோமவன்ச அமரசிங்க காலமானார்

June 15th, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

somawansaமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தனது 73ஆவது வயதில் காலமானார்.2014ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன், கட்சியிலிருந்து விலகினார்.மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

நாட்டின் விவசாய பொருளாதாரத்தை அரசாங்கம் சீர்குலைத்துள்ளது : மஹிந்த ராஜபக்ஷ

May 10th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

MAHINDAநாட்டின் விவசாய பொருளாதாரத்தை அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.மக்களை தாக்கியோ அவர்களை இழிவுபடுத்தியோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், பெரும்பான்மையான மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ருவாண்டா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

May 9th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ruwandaஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ருவாண்டா பேரிடர் மேலாண்மை மற்றும் அகதிகள் துறையின் பேரிடர் மீட்பு இயக்குநர் பிலிப்பி ஹபின்ஷூடி கூறுகையில், இது வரை நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சீனாவில் அரசாங்க ரகசியங்களை விற்றவருக்கு மரண தண்டனை

April 20th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

arestசீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் யு. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்கிற துறையில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மோசமான பணியாளர் என கண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியாற்றியபோது 1½ லட்சம் ரகசிய ஆவணங்களை தன் வசப்படுத்தி வைத்திருந்திருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் இணையதளம் வாயிலாக தன்னிடம் உள்ள அரசாங்க ரகசிய ஆவணங்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருப்பதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அந்த உளவு நிறுவன நிர்வாகம், அவரை பயன்படுத்தி கொண்டது. அவரை தென்கிழக்கு ஆசியாவிலும், ஹாங்காங்கிலும் சந்தித்து 1½ லட்சம் அரசு ரகசிய ஆவணங்களையும் பெற்றுக்கொண்டது. அந்த ரகசியங்களில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, ராணுவம், நிதி விவகாரங்கள் என பல விஷயங்கள் அடங்கும்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா திட்டம்

April 19th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

NORTH KOREAவடகொரியா 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுப்ரீம் கோர்ட்டு மூலமாக கச்சத்தீவு மீட்கப்படுவது உறுதி: அருப்புக்கோட்டை பிரசாரத்தில் ஜெயலலிதா பேச்சு

April 16th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

jeyaஅருப்புக்கோட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி), ராஜபாளையம், திருச்சுழி, சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை (தனி), பரமக்குடி (தனி), ராமநாதபுரம், முதுகுளத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:- Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையின் பொருளாதாரத்தைக் கவிழ்க்கும் விடுமுறைகள்

April 15th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

holydayஇலங்கையில் வருடம் ஒன்றுக்கு வழங்கப்படும் 25 பொது விடுமுறைகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நிவர்த்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் நாட்டில் வழங்கப்படும் பொது விடுமுறைகள் பெரும் தடையாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கட்சி தலைமை அனுமதித்தால் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்: நடிகை குஷ்பு

April 13th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

khuspooமுதல்–அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.அதனால் அந்த தொகுதியை விட்டுத் தரும்படி தி.மு.க.விடம் காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவை நிறுத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விரும்புகிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை தீவிரவாதி தாக்குதல்: 30 பேர் பலி

March 26th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

iraqஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு கோப்பைகள் வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.விழாவில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சவுதியில் 4 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது!

March 26th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

saudiசவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஐ.எஸ் அமைப்பை விட தலிபான்களால் இந்தியாவிற்கு ஆபத்து அதிகம்: ஆப்கானிஸ்தான் அதிகாரி தகவல்

March 4th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

talipanதலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு இயக்குநர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தெற்காசிய அளவில் இந்தியா கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மஹிந்த அரசில் அமைச்சு இருந்தது, உரிய நிறுவனங்கள் இருக்கவில்லை : நவீன்

February 27th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

NAVEENமஹிந்த ராஜபக்ஷ அரசில் தனக்கு அமைசொன்று வழங்கப்பட்டாலும் குறித்த அமைச்சுக்கு சொந்தமான நிறுவங்கள் வழங்கப்படவில்லை என பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார்.அகலவத்தை இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிடச் சென்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் அரசியல் இன்றி ஒன்றும் இல்லை என்றும் அது நாட்டின் முறையாக மாறியுள்ளது என அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.

AddThis Social Bookmark Button