வேலையில்லாப் பிரச்சினைகள் ஒரு சமூகவியல் பார்வை

February 19th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அதாவது வேலையில்லாப் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் மொத்த ஊழியப்படையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும் தகுதியும் ஆர்வமும் கொண்டிருந்த போதிலும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பதை குறிக்கும். இங்கு ஊழியப்படை எனப்படுவது சனத்தொகையில் 15 – 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பாதவர்கள் முதலானவர்களைக் கழித்துப் பெறப்படும் தொகையாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தோல்வியை நோக்கிய பயணம்

February 17th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர் தந்திரோபாயமும்

February 13th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் – ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

February 12th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை ஒன்றுசேர விடாது பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவின் காலில் மிதிபடும் மாலை தீவுகள்: கலையரசன்

February 11th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பெப்ரவரி மாத தொடக்கத்தில் (07.02.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷாத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன.

“அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷாத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.” இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, “மக்கள் எழுச்சி” அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும்: யதீந்திரா

February 11th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு இராஜதந்திரம் தேவை – இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புத்த நெறியும் பக்தி வழியும்

February 10th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

[சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையில் சென்ற டிசம்பர் 5, 2011 அன்று நடைபெற்ற பேரா.அ.கருணானந்தன் அவர்களின் திராவிடவியல் மற்றும் புத்தவியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு]

அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன் தொடர்பு உடையனவாகவே உள்ளன. வேதங்களைப் பிரமாணமாகக் கொண்டோ, இல்லை மறுத்தோ, இல்லை அவற்றுடன் சமரசமாகியோதான் இந்திய மதங்கள் அனைத்தும் உருவாயின. மேலும் வாசிக்க >>>

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பு கூறியது என்ன?

February 8th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அதிகார பகிர்விற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிழையானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இத்தகைய செய்தி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதேசமயம், தமிழ் பத்திரிகைகளில் இதே செய்தி வேறுவிதமாக பிரசுரமாகி உள்ளது. முன்னதை காட்டிலும் பின்னதே நம்பும்படியாக உள்ளது. ஆனால், இந்த விடயத்தில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் செய்தி தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதா? அல்லது அவர்களே வேண்டுமென்றே தவறு இழைத்தார்களா என்பது ஆராயப்படவேண்டிய பிறிதொரு விடயம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா

February 7th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு; நக்கீரன் தங்கவேலுவின் பார்வை

February 6th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி. மதுரையை ஆண்ட சண்பக பாண்டியனுக்கு ஓர் அய்யம். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா?’ என்பதே சண்பக பாண்டியனின் அய்யம். ‘உண்டு’ என்பது மதுரை இறையனார் கருத்து. ‘இல்லை’ என்பது புலவர் நக்கீரரின் வாதம்.

அய்யத்தைப் போக்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனப் பாண்டிய மன்னன் முரசு அறிவிக்கிறான். இதைக் கேட்ட ஏழைப் புலவன் தருமி அந்தப் பரிசைப் பெற ஆசைப்படுகிறான். தருமியின் புலம்பலைக் கேட்ட இறைவன் அவனுக்கு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறார். தருமியாக நாகேசும் இறைவனாக சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிதைவுறும் ஈரானியப் பொருளாதாரம்; அடி வாங்கப்போகும் அமெரிக்கா

February 5th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இஸ்லாமிய நாடுகளில் துருக்கி, இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியா நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது ஈரான். ஒபெக் நாடுகளில் இரண்டாவது பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடு ஈரான்.

ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி ஈரானின் ஐந்து அரச வங்கிகளின் மீது தடை விதித்ததைத் தொடர்ந்து ஈரானின் வெளியுலக நாணயத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவில் மருந்தை முற்றிலும் எதிர்க்கும் சக்தியுடைய காசநோய்

February 1st, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ இதழான Clinical Infectious Diseases, (தொற்று நோய்களைப் பற்றிய மருத்துவ ஆய்வு) இந்தியாவின் மிகப் பெரிய நகரமான மும்பையிலுள்ள பி.டி. ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் எழுதிய கடிதத்தில், அவர்கள் மருத்துவ மனையில் நான்கு (Totally Drug Resistant Tuberculosis -TDR-TB) முற்றிலும் காச நோய் (க்ஷயரோகம்) மருந்தை எதிர்க்கும் சக்தியுடைய நோயாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது

January 26th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழகத்தில் இருந்து சிலர், ‘ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்தவிகடன் வார இதழில் டி. அருள் எழிலனுக்கு வழங்கிய நேர்காணலில் ‘ஆறாவடு’ நாவலின் ஆசிரியர் சயந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழுவிபரமாவது; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

என்ன செய்யவேண்டும்?

January 25th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பத்திரிகை செய்திகளை வைத்து பார்க்கும் போது, முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் யாழ்ப்பாண விஜயம் உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகத் தோன்றுகிறது. இது, அவரது வருகைக்கு முன், அதனை எதிர்த்து தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் எழும்பிய விமர்சனங்களுக்கு விடையாகவும் அமைந்துள்ளது.

இலங்கை தமிழ் மக்களிடையே இந்திய ஆதரவு நிலைப்பாடு என்பது ஒரு விடயம். அதுவே, விடாமுயற்சியால் வாழ்கையின் ஒவ்வொரு படியிலும் வெற்றிபதித்து, ஓர் பெருமைக்குரிய, அதேசமயம் தமிழ் இனமே பெருமிதம் அடையவேண்டிய முன்மாதிரியாக டாக்டர் கலாம் அடையாளம் காணப்படுவது வேறொருவிடயம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று இலட்சம் தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியவர்கள்

January 24th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி. சுமார் அறுநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண நகரம் என்று மில்லாதவாறு அன்று வெற்றிச்சோடிக் காணப்பட்டது. வீடுகளுக்குள்ளும் மக்கள் இல்லை. வீதிகளிலும் மக்கள் இல்லை. புலிகள் இயக்கத்தினர் விடுத்த கடுமையான எச்சரிக்கை மற்றும் மிரட்டல், தாக்குதல் ஆகிய வற்றையடுத்து சுமார் மூன்று இலட்சம் மக்கள் யாழ். நகரத்தைவிட்டு வெளி யேறியிருந்தனர்; வெளியேற்றப்பட்டனர். ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் போன்ற வளர்ப்பு மிருகங்களையெல்லாம் அப்படி அப்படியே விட்டுவிட்டு மக்கள் வெளியேறிவிட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button