ஆத்மார்த்த பிரதிநிதிகள், ஏகப்பிரதிநிதிகள் அல்ல?

December 18th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரசாங்கமோ அல்லது த.தே. கூட்டமைப்போ பேச்சுவார்த்தையில் சிறப்பாக செயற்பட்டதாக கூற முடியாது. இப்போது பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் அணி ஆளும் கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் பேசும் தாயகத்தைக் காப்பாற்ற தமிழர் முஸ்லிம் ஐக்கியம் தேவை

December 12th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்களை எந்த அவகாசமும் கொடுக்காமல் பிறந்து வாழ்ந்து வளர்ந்த மண்ணிலிருந்து வெளி யேற்றியது கொடுமை. இதைவிடக் கொடு மை 1956 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை மூன்று தடவைகள் உயிர் பறிக்கப்பட்டவர்கள போக உடைமைகள் அனைத்தையும் இழந்து கப்பல்களில் அநாதைகளாக அகதிகளாக தங்கள் தாயகம் என்ற நிலையில் வடக்கே சென்ற தமிழர்கள் இஸ்லாமியத் தமிழர்களை வெளியேற்றியதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கைலாசபதியும் தமிழ்த் தேசியமும்

December 7th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசிய வாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

December 5th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நடைமுறையில் முழுமைபெறாத அரச கரும மொழி அமுலாக்கம்

December 4th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நமது நாட்டில் மொழி அமுலாக்கம் முழுமையாக நடை முறையில் இருக்கி றதோ? இல்லையோ? அரசாங்க மட்டத்தில் அரச கரும மொழி அமுலாக் கம் பேசப்பட்டு வரும் சொல்லாகிவிட்டது. அதுமட்டுமல்ல இது அடிக்கடி நமது காதுகளில் ஒலிக்கும் வார்த்தை. இந்த நாட்டில் தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகள். அரசியல் யாப்பிலும் இது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை அரசுக்கு இந்தியா உதவ முடியாமல் போகும்.

December 3rd, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக் காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விட யத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும். இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் ஆங்கில சஞ்சிகையில் அதன் கட்டுரையாளர் ஆர்.கே. இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட அரசியலையே நம்பி இருக்கிறது” : அ. மார்க்ஸ்

December 2nd, 2011 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த சில நாட்களில், ஒரு காலைப் பொழுதில் சண்டே இந்தியன் இதழுக்காக நண்பர் சங்கர ராம சுப்பிரமணியனும், க. சுப்பிர்மணியனும் வீட்டுக்கு வந்திருந்தனர். ரொம்ப ‘கேஷுவலாக’ நடந்த உரையாடல் இது.

அறுபது வயதைக் கடந்தும் களச்செயல்பாடுகளிலும் எழுத்துப் பணியிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் அ. மார்க்ஸ், இடதுசாரி கட்சி ஒன்றின் உறுப்பினராகத் தொடங்கி இன்று அவர் சென்றடைந்திருக்கும் இடத்தையும் சிந்தனை மாற்றங்களையும் க. சுப்ரமணியனிடம் பேசுகிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியா தேடிய புலிகளின் அடுத்த ‘தலைவர்’

November 18th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ராஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை ஒப்புக்கொண்டு, ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் மட்டுமே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற தொனிப்பொருளுடன் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஊடாகவும், உருத்திரகுமாரனின் நண்பரான ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன் வாயிலாகவும் நிபந்தனை விதித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த செய்திகளின் தொடர்ச்சியாக, 28.11.2008 அன்று நியூயோர்க்கில் உள்ள இந்திய உப தூதரக வளாகத்தில் மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களை இந்திய தூதரகத்தின் இராசதந்திரிகளில் ஒருவரான எஸ்.பி.சிங் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வட-கிழக்கு பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவு

November 16th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் உள்ள வேலையற்றப் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Solicitor Rengan Devarajan, Esquire : By Tarrin Constantine

September 14th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

I hereby give a brief statement regarding the ongoing matter between Rengan Devarajan, Prof. S. R. H. Hoole and The Sunday Leader following R.Devarajan demanding Rs. 50 million in damages over Prof. Hoole quoting me.

First, Prof. Hoole has referred to me as a ‘Businessman from the UK’. This is not the most suitable description of my profession. I am employed as the Group Financial Director for a Cypriot company that operates in Cyprus and in the UK. This Group was listed in The Sunday Times (UK) Rich List. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

’கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பாணை நிராகரிக்காதீர்கள்’

September 6th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புதுடில்லியில் இரு நாட்கள் இடம்பெற்ற ‘துயரும் தீர்வும்’ என்னும் கருத்தரங்கு எந்தவொரு தீர்வுக்கும் வர முடியாமல் முடிவடைந்திருக்கிறது. வழமைபோல் தமது சாதனையை நிகழ்த்தி முடித்த மனத்திருப்பதியில் ஈழத்தமிழர் தேசியத் தலைமைகள் வீடு திரும்பியிருக்கின்றனர். ‘ஒடுக்கப்பட்டவர்களே முதலில் உங்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையை குழி தோண்டிப் புதையுங்கள்’ – இதெல்லாம் ஒருபோதுமே நமது அரசியல் தலைமைகளின் காதில் ஏறப் போவதில்லை. ஏன் இந்த நிலைமையென்று கேட்டால் அதற்குரிய பதில் இந்தப் பத்தியாளரிடம் இல்லை. தவிர இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியளவிற்கு இந்தப் பத்தியாளர் புத்திசாலியுமல்ல. ஆனால் நமது அரசியல் தேடல் விருப்பிற்கும் நிர்ப்பந்தத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்ற புரிதல் இந்தப் பத்தியாளருக்குண்டு. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தரமுயர்த்தும் திட்டத்தில் வடகிழக்கு பல்கலைக் கழகங்கள் புறக்கணிப்பா?

September 4th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்துலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை அரசு புறக்கணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்விதமான உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்த் தரப்புகளிடம் தெளிவு உண்டா?

August 29th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசிக் கொள்ளும் நாம், பிரச்சினைக்கான தீர்வு எது என்பது பற்றி இன்னமும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு, சுதந்திரமாக வாழவேண்டும் என்பது பொதுவானது. தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசு கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிப்பதே ஆரோக்கியமானது

August 29th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திடம் காணப்பட்ட இதய சுத்தியற்ற போக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தளர்வு பெறுவதற்குக் காரணமாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில் அதன் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த பெருமைக்குரியவர்

August 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த்தேசிய இனத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (26 ஆகஸ்ட்1927) அவர்கள் பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

நமது அண்டைநாடாகிய இந்தியா 1947ஆம் ஆண்டு இரத்தக்களரி மத்தியில் சுதந்திரமடைய இலங்கையோ எவ்வித களரியுமின்றி ஆட்சி மாற்றத்தைப்பெற்றது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான இந்திய வரலாற்றையும் அங்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும் உற்றுநோக்கும் போது பல தேசிய இனங்களைக் கொண்ட அந்நாடு பல்வேறு சவால்களை சமாளித்து உலகில் சனத் தொகை கூடிய ஜனநாயக நாடு என்ற நற்பெயரையும் பெற்றுவிட்டது. காரணம் காலத்திற்கேற்ப பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கேற்ப அரசியல் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக இனங்கண்டு தீர்க்கப்பட்டதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button