எரிபொருள் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் QRமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்,நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில்,எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல மாகாணங்களில் அதிக உஷ்ணம் அவதானமாக இருக்குமாறு அறிவுரை

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் 2027இல் அறிமுகம் : பிரதமர் ஹரிணி அமரசூரிய 

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிலுள்ள முன் பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை:அமைச்சர் அப்பாஸ் அரக்சி

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் ஒருபோதும் போர்நிறுத்தத்தையோ அல்லது பேச்சுவார்த்தையையோ கோரவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். ஈரான் ஒரு உடன்படிக்கையை விரும்புவதாகவும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லை என்பதால் அதற்குத் தாம் இணங்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் செத்துட்டேனா? வதந்திகளுக்கு காபி ஷாப்பில் நின்றபடி அதிரடி பதில் அளித்த நேதன்யாகு

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் வைரலாகப் பரவின. குறிப்பாக, சமீபத்தில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் அவரது கையில் ஆறு விரல்கள் தெரிவதாகவும், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான காணொளி என்றும் கூறி, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகப் பலரும் வதந்திகளைக் கிளப்பினர். இந்தச் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நேதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய காணொளியை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லண்டனில் பதுங்கியுள்ள அலி கொமேனியின் 200 மில்லியன் சாம்ராஜ்யம்

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி, லண்டனில் சுமார் 200 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல்) மதிப்புள்ள சொகுசு சொத்துக்களை ரகசியமாக வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்சிங்டன், பிஷப்ஸ் அவென்யூ போன்ற லண்டனின் மிக விலையுயர்ந்த மற்றும் செல்வாக்கு மிக்கப் பகுதிகளில் இந்தச் சொத்துக்கள் அமைந்துள்ளதாக ஊடக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேலிய தூதரகத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள இந்த வீடுகள், ஈரானின் ரகசியக் கண்காணிப்பு மையங்களாகச் செயல்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை அறிவிப்பு

March 16th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு

March 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் எரிபொருள் விநியோகம்

March 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு (QR Code) முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

18 நாள் பச்சிளம் குழந்தை கட்டிடத்திலிருந்து விழுந்து பலி : பெண் கைது

March 15th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லண்டனின் மத்திய பகுதியில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பகுதியில், 18 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயரத்தில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக லண்டன் பெருநகரக் காவல் துறை (Metropolitan Police) தெரிவித்துள்ளது. ஹார்ஸ்பெர்ரி சாலையில் (Horseferry Road) உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தை விழுந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மன் பள்ளியிலிருந்து பொலிசாருக்கு வந்த அழைப்பு

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்று முன்தினம் காலை, ஜேர்மனியின் Osnabrück நகரிலுள்ள பள்ளி ஒன்றிலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். விடயம் என்னவென்றால், வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், பிள்ளைகள் தங்களுக்குள் ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிரிழந்த ஈரான் மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரானிலுள்ள பாடசாலை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 1.84 கோடி நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்ததோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button