உயிரிழந்த ஈரான் மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரானிலுள்ள பாடசாலை மீது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 1.84 கோடி நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலில் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்ததோடு, 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொஜ்தபா கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அவசர எரிபொருள் கொள்வனவு குறித்து அரசாங்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (13) அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவசர எரிபொருள் கொள்வனவு கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து நேர்மறையான பதில்

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடருமானால், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் உதவி கோரி இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்லாமாபாத்தில் ட்ரோன் அச்சுறுத்தல் : வான்பரப்பை மூடிய பாகிஸ்தான்

March 14th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வான்பரப்பில் ட்ரோன்கள் ஊடுருவியதாகத் தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் வெள்ளிக்கிழமை (13) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் இராணுவ சக்திகளின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.Politics

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏப்ரல் இறுதி வரை தடையின்றி எரிபொருள்: இந்த மாதத்திற்குள் மேலும் 4 கப்பல்கள் வருவது உறுதி

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்குமென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிற்பகல் வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரானின் அணுசக்தி வளாகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: முக்கிய இலக்குகளை அழித்ததாக அறிவிப்பு

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்கும் நோக்கில், தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தலேகான் (Taleghan) அணுசக்தி வளாகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த வளாகம், ஈரானின் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் சார்ந்த நுணுக்கமான சோதனைகள் மற்றும் மேம்பட்ட வெடிபொருள் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தத் தளம் தாக்கப்பட்ட நிலையில், ஈரான் மீண்டும் அதனைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததைக் கண்டறிந்ததை அடுத்து, மீண்டும் இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருமளவிலான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு: புத்தளத்தில் விசேட நடவடிக்கை

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை முன்னெடுக்கப்படவுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? ; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் : கனிமொழி

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கனிமொழி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவதானம்: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

March 13th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் நபர்களால் தங்கம் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை : மூன்று சந்தேகநபர்கள் கைது

March 12th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை – மொரட்டுமுல்ல பகுதியில், செவ்வாய்க்கிழமை 03ஆம் திகதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

March 12th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button