பெண்களை அச்சுறுத்தும் “மாதவிடாய் வறுமை”

March 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ” நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில் இருக்க நேரிடும், இதனால் தரமான மாதவிடாய்த் துவாய்களைப் பாவிக்க வேண்டும். அதன் விலை 600 ரூபா. வெறும் 8 துவாய்கள் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்கிறது. மாதாந்தம் இதனைக் கொள்வனவு செய்வதற்கு 1400 ரூபா தேவைப்படுகிறது. இன்றைய காலப்பகுதியில் இது பெரிய தொகை “என்றார். இவ்வாறு மாதவிடாய் கால சவால்களால்ப் பாதிக்கப்படும் பெண்கள் நாட்டில் அதிகரித்துள்ளனர். மாதவிடாய்; துவாய்களின் விலையேற்றம்,போதிய தெளிவின்மை, பாரம்பரிய நம்பிக்கைகள் போன்றவை மாதவிடாய் வறுமைக்கான காரணமாக உள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன : துரைராசா ரவிகரன்

March 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைகளை மீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்படும் விகாரைகள் ஒரு பௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னம். பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலைமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் : ஹக்கீம்

March 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இம்முறை வேட்பாளர் தெரிவில் பல மாற்றங்களைச் செய்துள்ளோம் : இரா.சாணக்கியன்

March 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குஷ் போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த இந்திய தம்பதி

March 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும் : முன்னனி சோசலிசக் கட்சி

March 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :  ஏப்ரல் 10 முதல் நாள் விவாதம்

March 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

‘பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை’ தொடர்பில் முதல் நாள் விவாதத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியும், இரண்டாம் நாள் விவாதத்தை மே மாதத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார் : விமல் வீரவன்ச

March 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார். பட்டலந்த விவகாரம் மீண்டும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கடந்த காலத்தை போன்றே பயணிக்கும் என்பது எமது நிலைப்பாடாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிப்போம் : சாமர சம்பத்

March 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88 மற்றும் 89 காலப்பகுதியில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லண்டனுக்கு தனிப்பட்ட பயணம் 160 இலட்சம் ரூபாவை செலவழித்த தம்பதியினர்

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸ் அதிகாரியை தாக்கிய வெலே சுதாவின் சகோதரன்

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது : நாமல் ராஜபக்ஷ 

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் 17 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் பயங்கரமான ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கச்சத்தீவில் தங்க சங்கிலி அறுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்

March 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீது மிகக்கடுமையான தீர்க்கமாக வான்தாக்குதல்களில் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button