பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் : நளிந்த ஜயதிஸ்ஸ

March 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்

March 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.நேற்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவான வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம், தேவையான ஆணிகளை புடுங்குங்கள் : மொஹமட் சாலி நழீம்

March 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதம் : கம்மன்பில குற்றச்சாட்டு

March 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்திலிருந்து தவறி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு

March 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும்:சண்முகம் குகதாசன்

March 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பட்டலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்பித்து அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : குமார் குணரத்னம்

March 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதுடன் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துக : துரைராசா ரவிகரன்

March 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவ அடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது : ஜனாதிபதி

March 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரச விழா திங்கட்கிழமை (10) பிற்பகல் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அநுர அமைச்சர்களுடன் வாதிடுவது முட்டாள்தனமானது:இரா.சாணக்கியன்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆளும் தரப்பிடம் முக்கிய விடயமொன்றினை பற்றி விசாரணை செய்து தெளிவுபடுத்துமாறு கேரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும், பாதுகாப்பு அமைச்சர் பதில் வழங்காது சென்றுவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும், யாழில் மதப் பிரசாரப் பணியிலும் தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து : ஐவர் உயிரிழப்பு

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் இன்று முடங்கும் அபாயம்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான Ver.di, தரைவழி பணியாளர்கள், பொருட்களை கையாளுபவர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button