அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து : ஐவர் உயிரிழப்பு

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் இன்று முடங்கும் அபாயம்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான Ver.di, தரைவழி பணியாளர்கள், பொருட்களை கையாளுபவர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செவ்வந்திக்கு பின்னால் இயங்கும் பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமனம்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி , வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாம்பன் மீனவர்களின் வேலை நிறுத்தம்

March 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த ஆரோக்கியம், செல்வம், ஜெயாஸ்டன், ஜோஸ்வா, சீமோன், முத்துராமன், முகிலன், ஆரோக்கியம், வால்டன், மாரிசெல்வம், ஜெயசூர்யா, ரிபாக்சன், தர்மன், விக்னேஸ்வரன் ஆகிய 14 மீனவர்களை கடந்த வியாழக்கி ழமை இரவு கைது செய்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மகனுக்கு ஹெரோயின் வழங்க முற்பட்டதாக தந்தையான உப பொலிஸ் பரிசோதகர் கைது

March 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு

March 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவினதும் அந்த நாட்டின் லிபரல் கட்சியினதும் தலைவராவதற்கான போட்டியில் மார்க்கார்னே வெற்றிபெற்றுள்ளார். அடுத்த சில நாட்களில் இவர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்அனைவருக்கும் வலுவான கனடாவை கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடன் நான் இரவுபகலும் பாடுபடுவேன் என பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான மார்க் கார்னே தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளைகள் வெளிநாட்டில் – யாழில் மன விரக்தியில் முதியவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

March 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (8) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி

March 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் மரணம்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிரியாவில் அரச படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களிற்கும் இடையில் மோதல்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிரிய பாதுகாப்பு படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினருக்கும் இடையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் மோதல் 750 பொதுமக்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனிதஉரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்து தென்னகோன் விரைவில் கைதாகுவார் : சுனில் வட்டகல

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button