இலங்கையின் இன்றைய வானிலை

January 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : 14 பேர் காயம்

January 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சேருநுவர பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர – கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (20) காலை குறித்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை எனக்கு வீடு வேண்டாம் : ஜனாதிபதி

January 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம். அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும். வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனம் ஒன்றிணைந்து சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும் : ஜனாதிபதி

January 20th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்நிலையம் ஸ்தாபிக்கப்படும். இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனத்தை ஒன்றிணைத்து நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இரு தரப்பினருக்கும் 50 இக்கு 50 என்ற அடிப்படையில் உரிமம் சொந்தமாகும். அடுத்த அமைச்சரவையில் அதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் திருகோணமலை எண்ணெய் தாங்களிகளில் 61 தாங்கிகளை இந்திய கூட்டு நிறுவனத்துடன் அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். இந்தியா எமது நண்பன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் சீகிரியாவில்

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச தரத்திற்கு இணங்க சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , (ஜனவரி 17, 2025) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா அவர்களினால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண் மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி: கொல்கத்தா நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடூமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மழையுடனான வானிலை தொடரும்

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தோஹாவில் போராளிகளின் ஒன்று கூடல்

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யுத்த நிறுத்தம் ஆரம்பமாகுவதற்கு சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் கட்டாரின் தலைநகர் தோஹாவில் ஒன்று கூடிய பலஸ்தீன போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகள்.

AddThis Social Bookmark Button

மன்னார் துப்பாக்கி சூடு சம்பவம் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது

January 19th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

January 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீன-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.

AddThis Social Bookmark Button

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட “சமஷ்டியே” தேவை!

January 18th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் கனடிய அரசாங்கம்

January 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

January 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே இன்று (17) காலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button