கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி

September 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டு பிக்குகளும் அடங்குவர். விபத்துக்குள்ளான கேபிள் காரில் அந்த நேரத்தில் 13 பிக்குகள் பயணித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன விபத்தில் பாடசாலை மாணவி பலி

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மீரிகம பொலிஸ் பிரிவில் உள்ள பஸ்யால கிரிஉல்ல வீதியில் உள்ள டி.எஸ். சந்திக்கு அருகில் வலதுபுறம் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 23) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற கட்சி, அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற கட்சி, அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக அறவிட உத்தரவிட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலிடம் தஞ்சமடைந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது : அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்பற்ற அரசியல்வாதிகள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை. மாறாக அவற்றுடன் தொடர்புடையவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் முடியாது. இதிலிருந்து தப்பிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடம் தஞ்சமடைவதும் பிரயோசனமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொழிலின்மையால் இளைஞர், யுவதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் : சஜித் பிரேமதாச

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொழிலின்மையால் இளைஞர் யுவதிகள் சட்டவிரோத நடவடிக்கைகள், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு மாறுகின்ற எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதால், வேலையில்லா நிலையை குறைப்பதற்கு சகல அரசாங்கங்களும் முன்னுரிமை செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் .

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

September 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

September 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

September 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரகீத் சுரங்க வீரத் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸவின் தலைமையிலான குழுவினர் வவுனியா நகரப் பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலுக்கு சென்ற 2 மீனவர்கள் மாயம்

September 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் குறித்த இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி வௌியானது

September 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வௌியிட்டுள்ளனர். இதற்கமைய 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதையல் தோண்டி பெண் கைது

September 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

September 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு

September 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

September 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் நான்கு பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்துகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button