6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரகீத் சுரங்க வீரத் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸவின் தலைமையிலான குழுவினர் வவுனியா நகரப் பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மோட்டர் சைக்கிளும் உடமையில் இருந்த 6 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டன.

சம்பவத்தில் வவுனியா மருக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுயை நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply