ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு
இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று நாளையுடன் (23) ஒருவருடம் பூர்த்தியாகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2021.12.20 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, 2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற 08 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திசை;சாட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று 42,31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 32.76 சதவீத வாக்குகளையும்,புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 17.27 சதவீத வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளைப் பெற்று 2.57 சதவீத வாக்குகளையும் முறையே பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள் வருமானம் மற்றும் அரச செலவுகளுக்கான பற்றாக்குறையை குறைத்துக் கொள்ளவதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டு இக்காலப்பகுதிக்குள் அரச வருமானம் 3221 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துக்கொள்ளப்பட்டது.
இக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் சுங்க வருமானம் அதிகரிப்பு விசேடமானதாக கருதப்படுகிறது.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் தனது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டின் 08 மாதகாலத்துக்குள் சுற்றுலாத்துறை கைத்தொழிலில் 2290 மில்லியன் ரூபாய் வருமானம் திரட்டப்பட்டுள்ளதுடன்,அத்துடன் 2025 ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் புதிதாக 40 அபிவிருத்தி கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் முதலீடாக 4,669 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஏற்றுமதி வருமானம் 10,000 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதுடன்,சுங்க வருமானம் 1,271 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அரச செயற்திட்டங்களை வலுப்படுத்தும் கொள்கைக்கமைய துறைமுக கண்காணிப்புக்கள் ஊடபக பெற்றுக்கொண்டுள்ள வருமானம் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 18 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளதுடன்,பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
மொழி சமவுரிமையை மேம்படுத்தல்,போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒழித்தல்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாண காணி விடுவிப்பு,வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு ஜனாதிபதியின் ஒருவருட பதவி காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply