இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது

September 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மஹிந்வை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் :பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

September 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றது. அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. ரணில் கைது விடயத்தில் நடப்பு அரசாங்கம் மேற்கொண்ட முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.

AddThis Social Bookmark Button

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை : வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

September 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

September 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2) உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

September 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 500 பேர் உயிரிழப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் காயம்

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சி.ஐ.டிக்கு இன்று வர வேண்டாம் : சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிப்பு

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். தான் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் தானே சிக்கி ஒருவர் உயிரிழப்பு

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் தான் அமைத்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி , ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெனீவா விவகாரம் குறித்து புதனன்று இராஜதந்திரிகளை சந்திக்கும் வெளிவிவகார அமைச்சர் : விஜித ஹேரத்

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது மீளாய்வுக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகிறது. இக்கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா செல்ல முன்னர் உள்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா கொழும்பில் நடைபெறவுள்ளது

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிகழ்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய எரிபொருள் விலை இன்று முதல் அமுலில்

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (01) முதல் எரிபொருளுக்கான புதிய விலை நடைமுறைக்கு வந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை நேற்று (31) காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கம் காத்திரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்:சுரேஸ் பிரேமச்சந்திரன்

September 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாகாண சபை தேர்தலைகளை நடாத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது

August 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் கல்முனையில் வைத்து சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன், வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button