வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் யாழ் பிரதேச காரியாலயம் காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் செயலக பிரிவில் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதுடன், யாழ் நூலகத்தின் அபிவிருத்தி பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச புதிய கிரிக்கெட் மைதானத்தின் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை (2) ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு விஜயம் செய்து ‘தென்னை தினம்’ அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அத்துடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டவுள்ளார்.
அத்துடன் பளை பகுதியில் தென்னை நாற்று உற்பத்தி நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply