December 31st, 2008 admin Posted in TELOnews No Comments »

இராணுவத்தின் தாக்குதல் படையணியான செயலணி-1 இன்று மாலை (டிச.31) பரந்தன் நகரை அடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பரந்தனுக்கு வடக்காக 2 கி.மீ. தொலைவிலுள்ள தட்டுவான்கோட்டை மற்றும் கோமாரிக்குடா பகுதியில் நிலை கொண்டிருந்த புலிகளிகளை தாக்கி அழித்துள்ளதாக களவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களில் புலிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியதுடன் பல படைப்பொருட்களைக் கைபற்றியுள்ளனர். படையினர் யுத்த தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பரந்தன் பிரதேசத்தை விடுவித்துள்ளமை புலிகள் மீதான கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கையின் முக்கிய மைல் கல்லாகும்.
இதேவேளை 57வது படையணி கிளிநொச்சி நகரை கைபற்றும் நோக்குடன் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். தாக்குதல் படையணியினரின் போர் ஆயுதங்கள் கிளிநொச்சி நகரை அண்டியபகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
December 28th, 2008 admin Posted in TELOnews No Comments »
செயலணி – 2ம், செயலணி – 4ம் புளியங்குளம் முதல் நெடுங்கேணி வரையிலான வீதியை முழுமையாக விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. புளியங்குளத்தில் இருந்து நைனமடு ஊடாக நெடுங்கேணியை நோக்கி முன்னேறிய செயலணி-2ம், நெடுங்கேணியை அண்மையில் விடுவித்த செயலணி-4ம் இணைந்துள்ள நிகழ்வு இன்று நடந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. இனி இப்படையணிகள் தண்டுவான் ஊடாக ஒட்டுசுட்டானை குறிவைத்து முன்னேறலாமெனப் படைத்துறை அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
December 12th, 2008 admin Posted in TELOnews No Comments »
புலிகளின் இம்ரான் பாண்டியன் சிறப்புப்படையணியின் சிறப்புத் தளபதி வேலவன், ‘நாம் இறுதி மறிப்புச் சமரில் நிற்கின்றோம்’ எனத் கண்டாவளையில் நிகழ்ந்த கூட்டமொன்றில் பேசியதாக புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வன்னியில் நிகழும் யுத்தம் ஒரு தீர்மானகரமான நிலைக்குள் வந்து விட்டது என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. கிளிநொச்சி – பரந்தன் வரையிலான ஏ-9 பாதை படையினரால் கைப்பற்றப்பட்டால் புலிகளின் இறுதித் தோல்வியை யாராலும் காப்பற்ற முடியாது போகும். ஆகவே, கிளிநொச்சி – பரந்தன் புறநகர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம் அனைத்து யுத்தங்களின் தாய் யுத்தமாக கருதக்கூடியது. இந்த யுத்ததில்தான் புலிகளின் வாழ்வும் சாவும் தங்கியுள்ளது என படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தனது புளொக் பதிவில் கருத்தெழுதியுள்ளார்.
December 11th, 2008 admin Posted in TELOnews No Comments »
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தை 72 மணித்தியாளங்களுக்குள் இந்திய மண்ணைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு பணிப்பாணை பிறப்பித்துள்ளதாக பிந்திய செய்தியொன்று தெரிவிக்கிறது.
December 10th, 2008 Thulasi Posted in TELOnews No Comments »

சிறீலங்காத் தூதரகத்தின் கண்காட்சிக்குச் சென்ற தமிழர் மீது கத்திக் குத்து மற்றும் கொலை வெறித் தாக்குதல் என்னும் தலைப்பில் புலிகளின் ஊடகங்கள் நேற்று முன்தினம் கத்தி குத்துச்சம்பவம் ஒன்றை பரபரப்பாக செய்திகளாக வெளியிட்டிருந்தன. புலிகளின் ஆங்கில செய்தி இணையமான தமிழ்நெற்றும் தலைப்புச்செய்தியாக வெளியிட்டிருந்தது. Read the rest of this entry »
December 4th, 2008 admin Posted in TELOnews No Comments »
இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுகளில் ஒன்றான செயலணி-2 (Task Force 2) இன்று மாலை புளியங்குளத்தை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏ-9 பாதையில் உள்ள ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான 8.5 கி.மீ நீளமான வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன், ஓமந்தையில் இதுவரை காலமும் இயங்கி வந்த புலிகளில் சோதனைச் சாவடியை அவர்கள் அங்கிருந்து அகற்றி ஒட்டுசுட்டானுக்கு மாற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார்.
ஓமந்தை உள்ள தமது சோதனைச்சாவடியை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருப்பார்களா அல்லது அதனை புளியங்குளத்துக்கு மாற்றுவார்களா என்பது குறித்து எம்மால் செய்திகள் எதனையும் தற்போது அறியமுடியவில்லை.