அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply