கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியது

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியதுடன், இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. 

இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 31 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 3012 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. 

நேற்று புதிதாக 139 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 80 ஆயிரத்து 409  பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். 2189 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply