சீனாவில் மேலும் 22 பேர் கொரோனா வைரசுக்கு பலி: நோய்த்தொற்று குறைகிறது

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. அதன்பின்னர் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உயிரிழப்பு விகிதமும் குறைந்தது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாக இருந்தது. நேற்று புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் 80700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply