18 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்கா கொரோனா அப்டேட்ஸ்

18 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்கா... கொரோனா அப்டேட்ஸ்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 558 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 18 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 302 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
ஐரோப்பாவில் நிலைகொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 684 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-
சீனா – 3,277இத்தாலி – 6,820அமெரிக்கா – 684ஸ்பெயின் – 2,808ஜெர்மனி – 157ஈரான் – 1,934பிரான்ஸ் – 1,100சுவிஸ்சர்லாந்து  – 122தென்கொரியா – 120இங்கிலாந்து – 422நெதர்லாந்து – 276பெல்ஜியம் – 122ஜப்பான் – 43பிரேசில் – 46கிரீஸ் – 20இந்தோனேசியா – 55பிலிப்பைன்ஸ்     – 35ஈராக் – 27ஸ்வீடன் – 36பொர்ச்சீகல் – 33ஆஸ்திரியா – 28கனடா – 25டென்மார்க் – 32துருக்கி – 44 ஈக்வடார் – 27எகிப்து – 20

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply