போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 92 பேர் பலி

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாட் நாட்டின் லக் மாகாணம் பொமா என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான ராணுவ வாகனங்களில் சென்றுகொண்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து போகோ ஹாரம் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்த 92 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply