2 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட மாவட்டங்களில் இவ்வாறு மீள அமலாக்கப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மார்ச் மாதம் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றையதினம் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு அமலாக்கப்படும் எனவும் அது மீண்டும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினமே மதியம் 2 மணிக்கு மீண்டும் அமலாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்களது வீடுகளில் இருந்தவாரே கொள்வனவு செய்ய முடியும் எனவும் தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply