திவால் ஆகப்போகிறோம் – பாதுகாப்பு தாருங்கள் : நீதிமன்றத்தை நாடிய விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.
குறிப்பாக கடனாளர்கள் தாங்கள் கொடுத்த கடனை செலுத்த நிர்பந்திப்பதால் நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு விமான நிறுவனம் இணைந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்டு பிரன்சன் என்ற தொழில் அதிபரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய விமான நிறுவனம் விர்ஜின் அட்லாண்டிக். இதன் 51 சதவிகித பங்குகளை விர்ஜின் அட்லாண்டிக்கா நிறுவனமும் எஞ்சிய 49 சதவிகித பங்குகளை அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனம் வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக போதிய வருமானம் இல்லாததால் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
ஆனாலும் நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதால் கடனாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. மேலும், ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தொகையை அடுத்த மாதம் வழங்க முடியாத சூழல் ஏற்பட உள்ளது.
இதற்கிடையில், இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டுவர மறுகட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கான தொகையை வெவ்வேறு வழிகளில் கடனாளர்களிடம் இருந்து திரட்டி திட்டத்தை செயல்படுத்த விர்ஜின் அட்லாண்டிக் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கு கடனாளர்கள் அனுமதி அளிப்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
இதற்கான ஒப்புதல்கள் கிடைக்கும்பட்சத்தில் பண முதலீடுகள் அக்டோபர் மாத தொடக்கத்தில் தான் நிறுவனத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை நிறுவனத்தை நடத்த போதிய பணம் இல்லாததால் திவாலில் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என அட்லாண்டிக்கா நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதேபோன்ற மனுவை இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றத்திலும் அட்லாண்டிக்கா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
மறுகட்டமைப்பு முதலீடுகள் வர இரண்டுமாத காலம் தேவைப்படும் என்பதால் அதுவரை கடனாளர்களிடமிருந்து நிறுவன சொத்துக்களை பாதுகாக்கவும், நிறுவனம் திவாலாகம் இருக்கவும் போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி அட்லாண்டிக் நிறுவனம் இந்த மனுவை நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
நிறுவனத்தை நடத்த அடுத்த மாதம் பணம் இல்லாத சூழலில் பாதுகாப்புக்கோரி பிரபல விமான நிறுவனமான அட்லாண்டிக் நீதிமன்றத்தில் திவாலில் இருந்து பாதுகாக்ககோரி மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் விமான நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply