பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஜப்பான் அரசு ஒப்புதல்

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து தான் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அதனைதொடர்ந்து இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த 16-ந்தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஜப்பான் அரசு முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பானில் தற்போது வரை கொரோனாவால் 4,14,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பானில் வரும் மார்ச் 7-ந் தேதி வரை அவரச நிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply